Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத ஒதுக்கீட்டு: தமிழக அரசு மேல்முறையீடு….!!!!!

வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனால் வன்னியர் சமுதாயத்தினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

முன்னதாக 35க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்து, தமிழக அரசு பிறப்பித்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு அரசாணையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய அனைத்து மனுதாரர்களுக்கும் எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |