தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.