Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு…! ”அப்படி ஆகிட்டுனு” அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி….!!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு  விசாரணைக்கு வர இருக்கின்றது. 

வன்னியர்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியைச் சேர்ந்த சின்னாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்   மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வருவதாகவும்,

இந்நிலையில் தேர்தலை கருத்தில் கொண்டு திடீரென வன்னியர்களுக்கு மட்டும்  10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணை பிறப்பித்தது சட்டவிரோதம் என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார். எனவே இட ஒதுக்கீடு அரசாணை இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தனது மனுவில் முறையிட்டு இருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசாணைக்கு நீதிமன்றம் தடைவித்ததால் அதிமுகவுக்கு பின்னடைவு என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Categories

Tech |