Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு… மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பமும் எழுந்துள்ளது.

அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன்படி தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கு வதற்கான உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு மற்றும் சம மரபினரும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு வளமும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Categories

Tech |