வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முதல்வர் தலைமையில் ஆலோசனை நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் தொகை அடிப்படையில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு சரியான நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து நேற்று தலைமை செயலகத்தில் வன்னிய சமூகத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமை வகித்தார். மேலும் அமைச்சர் ரகுபதி ,ராஜகண்ணப்பன் , எம்பி, தலைமை செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.