Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்னியர் ஆதரவை இழந்துட்டாங்க… அத திரும்ப பெற தான் இப்படியெல்லாம் பண்றாங்க… பாமகவை சாடிய காங்கிரஸ் எம்.பி…!!!

வன்னியர்களின் ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சியினர் இழந்துவிட்டதாகவும், அதுவே பாமக தோல்விக்கு காரணம் என்று காங்கிரஸ் எம்பி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளதாவது: மூன்று  வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது, விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வருகின்ற நேரத்தில் இதனை மாற்றம் செய்துள்ளார்.  மத்திய அரசை பொருத்தமட்டில் வேளாண் பொருட்களை வாங்குகிற அதிகாரம் பெரும் பணக்காரர்களிடம் இருக்க வேண்டும் என்பற்காக தான் இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு போராடியது. இந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடியதன் விளைவாக வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இன்று விவசாயிகளின் கையில் உள்ளது.

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. மேலும் டெல்லி போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வாங்கி தருவதற்காக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். வன்னியர் சங்கத்தினர் ஆதரவு எப்போதும் எல்லாம் இருக்கிறதோ அப்போதெல்லாம் பாமக வெற்றி பெற்றது. தற்போது வன்னியர்களின் ஆதரவு இல்லாமல் தான் பாமக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஜெய்பீம் படத்தை தற்போது பாமகவினர் கையில் எடுத்துள்ளனர். ஜெய் பீம் படம் என்பது ஒரு சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களை பற்றி பேசும் படம். அதனை தங்கள் அரசியல் லாபத்திற்காக அன்புமணியும், ராமதாசும் பேசுவது வருத்தத்திற்கு உரியது என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |