Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து…. அடுத்த வாரம் விசாரணை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது.

இதனை கண்டித்து பாமகவினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் தமிழக அரசு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் அடுத்த வாரம் விசாரணை செய்யப்படும் என்று கூறி ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |