தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு மத்தியில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தற்காலிக சட்டத்தை எதிர்த்து தென்னாடு மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது.
தற்காலிக சட்டத்தின் அடிப்படையில் மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. எம் பி சி பிரிவில் 22 ஜாதிகளுக்கு வெறும் 2.5%இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.