தமிழகத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான் அதனை திமுகதான் செயல்படுத்தும் என ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
அதன்படி தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில் வன்னியர் முன் ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான், அரசாணை கூட அதிமுக அரசால் வெளியிட முடியாது, முதல்வர் அறிவித்த வன்னியர் இட ஒதுக்கீட்டை திமுகதான் செயல்படுத்தும் என்ற எதிர்க்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மேலும் அரசு கஜானாவை தான் எடப்பாடி பழனிசாமி தூர்வாரி இருக்கிறார், நீர்நிலைகள் அல்ல என்று விமர்சித்துள்ளார்.