வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த 10 பேரை காரில் வந்த மர்ம நபர் சுட்டு கொலை செய்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோவின் மேற்குப் பகுதியில் ஜலிஸ்கா மாகாணம் உள்ளது. நாட்டிலேயே அதிக அளவு வன்முறை நடைபெறும் இடமாக ஜலிஸ்கா மாகாணம் திகழ்கிறது. சமீபத்தில் நடத்திய ரகசிய புதைகுழி சோதனையில் ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன வேறு எந்த மாகாணத்திலும் இந்த அளவு உடல்கள் இதுவரை கண்டெடுக்கபடவில்லை. போதை பொருள் கடத்தல் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்கின்றதாலே இது போன்ற கோர வன்முறைகள் நிகழ்தப்படுகிறது.
இந்நிலையில் ஜலிஸ்காவின் மேற்கு பகுதியில் உள்ள குவாடலஜாரா நகரில் ஒரு வீட்டிற்கு முன்பு பேசிக்கொண்டு நின்றிருந்த 10 பேரை காரில் வந்த மர்ம நபர் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் கொலையாளி காரில் ஏரி தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த 10 நபரை பார்த்து போலீசார் அதிர்ச்சியுற்றனர்.
இதில் வீட்டில் இருந்த ஒரு பெண் மற்றும் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்