Categories
தேசிய செய்திகள்

வன்முறையின் போது 15 இஸ்லாமியர்களை காப்பாற்றிய இந்து பெண்…. குவியும் பாராட்டு….!!!!

ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்து அமைப்பினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று புத்தாண்டை கொண்டாடினர். அப்போது அவர்கள் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கும் கரோலிபகுதி வழியாகச் சென்றபோது அங்கு உலகங்களை எழுப்பிய இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப்பகுதியில் வன்முறை வெடித்தது. மேலும் அங்கிருந்த இஸ்லாமிய கடைகளுக்கு தீ வைத்து கடைகளை சூறையாடினர்.

அதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் கடை வைத்திருக்கும் மதுலிகா சிங் என்பவர் கடைக்குள் 15க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தஞ்சம் புகுந்தனர். உடனே அவரும் அனைவரையும் உள்ளே அனுமதித்தார். மேலும் அவர்களை விரட்டி வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் அனைவரையும் காப்பாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அன்றைய தினம் வெடித்த வன்முறையில் மக்கள் வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தனர்.

அப்போது தனது கடைக்குள் தஞ்சமடைய வந்து அவர்களை உள்ளே அனுமதித்து கவலைப்பட வேண்டாம் என்று அவர்களிடம் கூறினேன். இவர்களை விரட்டி வந்தவர்களையும் தடுத்து நிறுத்தி காப்பாற்றினேன். எல்லாவற்றையும் விட மனித நேயம் பெரியது என்பதால் இவர்களை நான் காப்பாற்றினேன் என்று தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Categories

Tech |