Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்முறையில் எப்போதும் நம்பிக்கை இல்லை…. டிடிவி தினகரன் கருத்து….!!!

வன்முறையில் எப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அதிமுக கட்சியை சேர்ந்த ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமில்லாமல் அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரும் அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய ஈபிஎஸ் கார் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதாக அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதில் அமமுக ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர வன்முறையில் எப்போதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |