Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வன்முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்…. உறுதிமொழி எடுத்த பெண்கள்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதற்கு திட்ட இயக்குனர் சீனிவாசன், வட்டார இயக்க மேலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

இந்நிலையில் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காண வேண்டும், குடும்ப வன்முறை சட்டத்தில் பெண்கள் புகார் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மகளிர் திட்ட பணியாளர்கள், சுய உதவி குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |