Categories
தேசிய செய்திகள்

வன்முறை களத்தில்…. விவசாயிகளின் நெகிழ்ச்சி செயல்…. வைரலாகும் காணொளி…!!

போராட்ட களத்தில் தனியாக சிக்கிய காவல் அதிகாரி ஒருவரை விவசாயிகள் பத்திரமாக அழைத்து செல்லும் காணொளி இணையத்தி வைரலாகி வருகின்றது.

டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளின் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 12 மணிக்கு முன்பே விவசாயிகள் காவல்துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி எல்லைக்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அனுமதிக்கபட்ட வழி தவிர மற்ற வழிகளில் விவசாயிகள் செல்ல முயன்றதால் காவல்துறையினர் தடியடி நடத்தியும், விவசாயிகளின் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்தனர்.

இந்நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர் போராட்டக்காரர்களிடையே தனியாக சிக்கிக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரை பத்திரமாக விவசாயிகள் அனுப்பிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்த போலீஸ் அதிகாரி மீது எதிர்ப்பாளர்கள் தாக்குதல் நடத்தாத வண்ணம் பாதுகாத்து விவசாயிகள் சிலர் பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |