Categories
அரசியல் மாநில செய்திகள்

வயசு தான் 65…. பேச்சு 25மாதிரி இருக்கும்… எச்.ராஜாவை புகழ்ந்த எம்.எல்ஏ …!!

அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நான் எப்போதும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது இல்லை. ஏனென்றால் கொடுத்தால் அவர்கள் போடுவதும் இல்லை. ரொம்ப ஹாட்ஸ் பேசினா தான் அவங்க போடுவாங்க. அதுவும் அவுங்க ரேட்டிங்கிற்காக   போடுவாங்க. நான் ஒன்னு ரொம்ப ஹாட்ஸ்ஸாக பேசுவதில்லை.

கொஞ்சம் நைஸ்ஸா  தான் பேசுவேன். நம்ம தலைவருக்கு வயசு கம்மி. அண்ணனுக்கு எச்.ஆருக்கு வயது 65 ஆனாலும், 25 மாதிரி பேட்டி கொடுத்துக் கொண்டே இருப்பார். உங்கள் வீட்டில் இருக்கும் தாய் ஒரு பெண் தானே. உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியும் ஒரு பெண் தானே. உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது அல்லவா. மனசாட்சி இருக்கிறதா ? தஞ்சாவூர் எஸ்.பி ஒரு பெண்ணாகத்தான் இருக்க கூடும் என்று நான் நினைக்கின்றேன், அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

பெண் என்றாலே இரக்கத்தின் வடிவம். பெண் என்றாலே எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய எண்ணத்தை உடையவர்கள். தாய்மார்கள் என்று சொன்னாலே அவர்கள் கண்ணியத்துக்குரியவர்கள். ஆனால் தஞ்சாவூர் எஸ்பிக்கு எந்த ஒரு கண்ணியமும் இல்லை. அவர்களுக்கெல்லாம்  பெண் குழந்தை இருக்கா என்று எனக்கு தெரியல.தஞ்சாவூர் எஸ்பிக்கு அப்படி பதவி ஒரு கேடா ? நீங்களும் ஒரு ஐபிஎல் தான. எங்க கிட்டயும் ஒரு ஐபிஎஸ் இருக்காரு.

உங்களுக்கெல்லாம் மானம் வேணும், டிரஸ் எல்லாம் போடுறீங்க… எதுக்கு காக்கிசட்டை போடுறீங்க என்கிற  எண்ணம் இல்லை. நீங்கள் நியாயம் எது ? நீதி எது ? என்று சொல்லிட்டு போகலாமே. உங்களுக்கு ஒரு உணர்வு வேண்டாம் என விமர்சித்தார்.

Categories

Tech |