Categories
தேசிய செய்திகள்

வயசு 23…. திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடியபோது….. திடீரென கீழே விழுந்த இளம்பெண்…. பின் நடந்த சோக சம்பவம்..!!

கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி கீழே விழுந்து 23 வயதான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கோலலகிரியில் உள்ள ஹவாஞ்சே என்ற பகுதியில் ஜோஸ்னா கோத்தா என்ற இளம்பெண் பெண் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 23 வயதான ஜோஸ்னா அந்த நிகழ்ச்சியில் நடனமாடி விட்டு உறவினரிடம் பேசிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென அவர் மயங்கி விழுகிறார். அதாவது இவர் புதன்கிழமை மாலை தனது உறவினர் வீட்டில் நடந்த விழாவின்போது இரவு 8.30 மணியளவில் ரத்த அழுத்தம் குறைந்ததால் மயங்கி விழுந்தார். அதன்பின் மயங்கி விழுந்து அவரை அங்கிருந்த மீட்டு அங்கிருந்த உறவினர்கள் கஸ்தூர்பா  மருத்துவமனையில்அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.. இறப்பிற்கான காரணம் மாரடைப்பு என மருத்துவர்கள் தெரிவித்தனர்.. உயிரிழந்த ஜோஸ்னா கோத்தா குந்தாபுரா பஸ்ரூரில் வசித்து வந்தவர்.. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மிகவும் சந்தோஷமாக ஆடிக்கொண்டிருந்த 23 வயதான இளம்பெண் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

சமீப காலமாகவே இளைஞர்களிடையே மாரடைப்பால் மரணம் ஏற்படுவது வழக்கமாகியுள்ளது. அதில் குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாரடைப்பு என்பது அதிக அளவில் இளைஞர்கள் இடையே ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறுகிறார்கள்..

இன்றைய நவீன உணவுப் பழக்கங்கள், அதேபோல மது, சிகரெட் போன்ற போதை வஸ்துகளாகட்டும், இது போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமாக நுரையீரல் மிகவும் மோசமான கட்டத்தை எட்டுகிறது. எனவே உணவு கட்டுப்பாடு போன்ற பல்வேறு விஷயங்களில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும், செலுத்தவில்லை என்றால் இது போன்ற விஷயங்கள் நடப்பது தொடர் கதையாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்..

Categories

Tech |