Categories
உலக செய்திகள்

வயதானவர்களுக்கு ஆபத்து…. கட்டாயம் தடுப்பூசி போடுங்க…. ஸ்விஸ் கவுன்சில் எச்சரிக்கை…!!

ஸ்விஸ் கவுன்சில் வயதானோர் கட்டாயமாக தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.  

ஸ்விட்சர்லாந்தில் உள்ள வயதான குடிமக்கள் அத்தனை பேரும் கொரோனா நோய்க்கான தடுப்பு ஊசியை கட்டாயம் போட்டுக் கொள்ளுமாறு மூத்த குடிமக்கள் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.  மேலும் கொரோனோவால் ஏற்படும் சுகாதார நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து போராட இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்விட்சர்லாந்தில் கடந்த புதன்கிழமை அன்று 90 வயதுடைய பெண் ஒருவர் கொரோனோவுக்கு எதிரான தடுப்பு ஊசியை முதன் முதலாக போட்டுள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் நாடு முழுவதும் தடுப்பூசி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்விஸ் மூத்த குடிமக்கள் கவுன்சில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கொரோனோவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி அளிப்பதற்க்காக தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரம் நிம்மதி தருகிறது. மேலும் இந்த கொரோனோவை எதிர்த்து போராடுவதற்கு தேவையான முயற்சிகளை மத்திய கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை ஆதரித்துள்ளது. மேலும் இக்கொடிய தொற்றினால் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வயதானவர்கள் மிக அதிகமாக பாதிப்படைந்துள்ளனர். அதாவது 6500 வைரஸ் இறப்புகளில் 80 வயதை கடந்தவர்கள் முக்கால்வாசிக்கும் மேலானோர் ஆவர்.

Categories

Tech |