Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயதான பாட்டிகளிடம் கைவரிசை…! வசமாக சிக்கிய 4பெண்கள்… சிறையில் தள்ளிய மதுரை போலீஸ் …!!

மதுரை மாநகரில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 4 பெண்களை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர்.

மதுரை மாநகரில் வழிப்பறி கும்பல்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்று மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகரம் முழுவதும் அதிரடி வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தல்லாகுளம் நாராயணபுரம் மந்தையம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவிழா நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மதுரை நாராயணபுரம் ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த இந்துராணி, ஞானசுந்தரி, தமிழரசி,  அழகம்மாள் ஆகிய 4 பெண்களிடம் யாரோ சிலர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து மாநகரம் முழுவதும் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் கோவை மாவட்டம் துடியலூர் ஊரைச்சேர்ந்த ஜெயந்தி, திவ்யா, அமுதா மற்றும் பிரியா ஆகிய நால்வரையும் தல்லாகுளம் காவல் துறையினர் கைது செய்து தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் நான்கு பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 24 மணி நேரத்தில் கைது செய்து தங்க நகைகள் மீட்கப்பட்டதன் காரணமாக அவர்களை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |