Categories
தேசிய செய்திகள்

வயதுக்கு வந்த ஆண், பெண் ஒன்றாக இருக்கலாம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

அரியானா மாநிலத்தில் திருமண வயது வரவில்லை என்றாலும் வயது வந்தோர் ஒன்றாக வாழலாம் என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் தற்போது உள்ள கலாச்சாரத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இளம் வயது ஆண் பெண் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருமண வயது வரவில்லை என்றாலும் வயது வந்தோர் (மேஜர் ஆனவர்கள்) ஒன்றாக வாழலாம் என்று அரியானா ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி வயதுக்கு வந்தவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் தங்கள் வாழ்க்கையை வாழ அனைத்து உரிமையும் உண்டு.

ஒரு ஆண் பெண் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை சமூகத்தால் தீர்மானிக்க முடியாது. ஒருவர் தனது துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம், வாழ்க்கை உரிமைக்கான ஒரு முக்கிய அம்சம் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த அதிரடி தீர்ப்பு இளம் வயதினரிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. இருந்தாலும் சில தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |