மத்திய மந்திரி இரானி தன் சமூகஊடகத்தில் அவரது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது ஆகிய வாசகர்களை கவரும் அடிப்படையிலான காட்சிகள், பதிவுகளை வெளியிடுவது வழக்கம் ஆகும். சில வாரங்களுக்கு முன் தன் இன்ஸ்டாகிராமில் அவர் சமையல் செய்த விபரங்களை வெளியிட்டார். அவற்றில், மந்திரி இரானி சமையல் அறையில் லட்டு தயாரிப்பில் ஈடுபடும் புகைப்படம் காணப்பட்டது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை இன்ஸ்டாவில் பின்தொடருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் மாஸ்க் அணிந்தபடி பொருட்களை வாங்குவதற்காக அவர் ஷாப்பிங் சென்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அப்பதிவில் உங்களது வீட்டில் இருப்பவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக ஓடும் போது வயது முதிர்வது உங்களுக்கு தெரியவரும். எனினும் விடுமுறையை கொண்டாடி வரும் உங்களது விருப்பத்துக்கு உரிய நபர்களுக்காக நீங்கள் ஓடுகிறீர்கள் எனில், அது அதிகம் விரும்பத்தக்கது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை நெட்டிசன்கள் வரவேற்று உள்ளனர்.