மின்சார பழுதை சரி செய்வதற்காக மின்கம்பத்தின் மீது ஏறிய வயர் மேன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதிமாஞ்சேரி பேட்டை பகுதியில் உள்ள மின்வாரியத்தில் வயர் மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய கிராமத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பழுதை சரி செய்வதற்காக மின்கம்பத்தின் மீது ஏறி உள்ளார்.
அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. இதில் வெங்கடேசன் மின்கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த வெங்கடேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.