இசை உலகில் மிகப்பெரிய புகழைப் பெற்ற வயலின் வித்வான் டி.என். கிருஷ்ணன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கேரளாவின் திருப்புணித்துறை என்ற பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு வயலின் வித்வான் டிஎன்.கிருஷ்ணன் பிறந்தார். 92 வயதுடைய அவர் சென்னையில் நேற்று மாலை இயற்கை எய்தினார். அவர் இசைத்துறையில் சங்கீத கலாநிதி, பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வயலின் வித்வான் கிருஷ்ணன் மறைவு இசை உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இசைகள் அனைத்தும் பரந்து விரிந்த உணர்வுகளை அழகான முறையில் கொண்டிருக்கும். அதுமட்டுமன்றி நம்முடைய கலாச்சாரம் பின்னிப் பிணைந்து இருக்கும். இன்றுள்ள நிலையை இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் தலை சிறந்த ஆசிரியராக திகழ்ந்தவர் அவர்” என்று அவர் கூறியுள்ளார்.