வயலில் ஆடு மேய்ந்ததால் உறவினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கைலவனம்பேட்டை கிராமத்தில் விவசாயியான தாயுமானவன் என்பவர் வசித்து வருகிறார். அதே ஊரில் தாயுமானவனின் உறவினரான ராவுத்தர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தாயுமாவனுக்கு சொந்தமான வயலில் ராவுத்தர்சாமியின் ஆடுகள் மேய்ந்துள்ளன. இதுகுறித்து ராவுத்தர்சாமியிடம் தாயுமானவன் கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.