வயலில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஈசனூர் பெட்ரோல் பங்க் எதிரிலுள்ள வயலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அந்த வாலிபர் குறித்த விவரம் பற்றியும், அவரது இறப்பு பற்றியும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.