பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஓடாச்சேரி சமத்துவபுரம் பகுதியில் 27 வயதுடைய ராஜராஜசோழன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 55 வயதுடைய பெண்ணிற்கு ராஜராஜசோழன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருவாரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜராஜசோழன் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்து உறுதியானது. இதனையடுத்து ராஜராஜ சோழனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.