உத்தரகாண்ட் மாநிலத்தில் வயல் வெளியில் துணியால் சுற்றப்பட்டு பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள எல்லையில் இருக்கின்ற உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கட்டிமா என்ற கிராமத்தில் சிலர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மண்ணைத் தோண்டிக் கொண்டிருக்கும் போது துணியில் சுற்றப்பட்டு, மண்ணில் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை ஒன்று இருப்பதை கண்டனர்.
அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்தக் குழந்தை தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது.