உத்திர பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கோட்பாலி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை கால்நடைக்கு புல் அறுக்க வயலுக்கு சென்றுள்ளார். அப்போது தனது ஆண் நண்பரை சந்திக்க வயல் பகுதிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அவரை பின்தொடர்ந்த வந்த அதே பகுதியை சேர்ந்த ஏழு பேர் வயலுக்கு செல்லும் வழியில் காட்டுப் பகுதியில் அந்த பெண்ணை இடை மறித்திருக்கின்றனர். அதன்பின் தாங்கள் வைத்திருந்த கை துப்பாக்கியை கொண்டு மிரட்டி அந்த பெண்ணின் ஆடையை களைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்த செயலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர். இதனை அடுத்து அந்த கும்பல் இடமிருந்து தப்பித்த அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் இந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அனுஜ், குல்தீப்,அங்கித்,ரவி,ரிஸ்வான், சோட்டா, அப்துல் போன்ற ஏழு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.