மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூஞ்சோலை கிராமத்தில் செங்கோடன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மல்லிகாவிற்கு சொந்தமான மாடு அப்பகுதியில் இருக்கும் அந்தோணி என்பவரது வயலில் இருந்து நெல் பயிரை மேய்ந்துள்ளது.
இதனால் மல்லிகாவிற்கு அந்தோணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அந்தோணி மல்லிகாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்அந்தோணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.