Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வயலில் வேலைபார்த்த பெண் குழந்தைகள்…. விதிமீறிய அரசு பள்ளி ஆசிரியை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்த அரசு பள்ளியின் ஆசிரியரை முதன்மை கல்வி அதிகாரி பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக கலைமகள் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் மறிங்கிப்பட்டியில் டாக்டர் அவார்டு தாய் பெண் எனும் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார். இந்நிலையில் ஆசிரியர் தனக்கு சொந்தமான வயலில் வேலை பார்ப்பதற்காக காப்பகத்திலுள்ள பெண் குழந்தைகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அந்த காப்பகத்தை மூடி சீல் வைத்தார். இதுகுறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அரசு பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக, சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் ஆசிரியையின் பதில் அதிகாரிக்கு திருப்தியாக இல்லை. இதன் காரணமாக பெண் குழந்தைகளை தனது சொந்த வேலைக்கு பயன்படுத்தி நன்னடத்தை விதிகளை மீறியதால் 17(இ) படி ஆசிரியை கலைமகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |