உத்திரப்பிரதேச மாநிலத்தில், தலித் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம், கவுதமபுத்தா நகர் பகுதியை அடுத்துள்ள கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வயல் வெளிக்கு சென்ற அப்பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி 4 பேர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. இந்த பாலியல் வன்கொடுமை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நான்கு குற்றவாளிகளில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.