Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயலுக்குச் சென்ற 2குழந்தைகள்… வாய்க்கால் தண்ணீரில்… மூழ்கி பலி…!!!

திருச்சி மாவட்டத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற இரண்டு குழந்தைகள் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகே உள்ள கரையோரத்தில் ரவிச்சந்திரன் மற்றும் அனிதா என்ற தம்பதியினர் ஆறுவயது தர்ஷினி மற்றும் நாலு வயது நரேன் ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். அனிதா திருச்சி தில்லைநகரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் காரணத்தால், அனிதாவின் தாய் இரு குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறார். நேற்று மாலை நேரத்தில் குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக பெருவளை வாய்க்கால் பகுதிக்கு சென்றனர்.

நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வராததால் அனிதாவின் தாய் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது குழந்தைகள் இருவரும் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கியதை கண்டு, சமயபுரம் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் பாண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இன்று காலை குழந்தைகள் இருவரையும் சடலமாக மீட்டனர்.

Categories

Tech |