Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வயலுக்குள் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வல்லவிளை பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் காரில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் வெங்குளம்கரை பகுதியில் இருக்கும் அபாயகரமான வளைவில் அதிவேகமாக சென்றனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவரில் மோதி வயலுக்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் 4 வாலிபர்களும் உயிர் தப்பினர். பின்னர் அவர்களை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |