Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வயலுக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செல்வமந்தை கிராமத்தில் விவசாயியான வினோத்குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு வினோத் குமாருக்கு புவனேஸ்வரி(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தனது கணவர் விவசாய நிலத்திற்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த வினோத் குமார் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |