விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கும்மங்குளம் பகுதியில் விவசாயியான ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நட்சத்திரமேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயராஜ் தனது வயலுக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஜெயராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.