வயாகரா என்பது நேரடியாக வாங்கி பயன்படுத்தும் மருந்து கிடையாது. மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே. பரிந்துரைக்கும் அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு டோஸ்க்கு மேல் கூடாது. உறவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இதை உட்கொள்ள வேண்டும். இதை உட்கொள்வதற்கும் உணவு அருந்துவதற்கும் இடையே இரண்டு மணி நேர இடைவேளை அவசியம். கொழுப்பு உணவுகள் இதன் செயல் வேகத்தை குறைக்கும்.
இது அடிப்படையில் நுரையீரல் தமனியின் உயர் ரத்த அழுத்த நோய்க்கான மருந்தான வயாகரா ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிந்துரை படிக்கிறது. ஆனால் இது ஆபத்தாகும். பக்கவாதம், பார்வை பாதிப்பு, இதயத்துடிப்பு அதிகரித்தல், நெஞ்சு வலி, சுவாசக் கோளாறு, ஏன் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து உண்டு. சிறு பக்க விளைவுகள் ஏராளம். அதனால் ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.