பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, ஐயா வாஜ்பாய் உடைய பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மாசமோ, 2 மாசமோ தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கின்றார்கள், நானும் 4, 5 கூட்டத்தில் கலந்து கொண்டேன். மதுரையில் எல்லாம் பார்த்தேன். கராத்தே தியாகராஜன் என்னைக்கு சென்னையில் காலை வைத்தாரோ, அன்னைக்கே ரொம்ப பேருக்கு புளி கரைச்சிருக்கும்.
ஏனென்றால் நல்ல ஒரு அற்புதமான ஒரு போராளி, அடிமட்ட தொண்டனாக வேலை செய்யகூடிய கராத்தே தியாகராஜன் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பத்திரிக்கையாளர் சகோதரர்கள் நீங்கள் இப்ப வந்து சில நிபந்தனைகளுக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் அதெல்லாம் மாறும், எப்படி சினிமா மாறியதோ, அதே போல் மாறும். மீண்டும் சினிமாவை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று நினைக்கிரார்கள், அது முடியாது.
எதற்கு சொல்கிறேன் என்றால், முதலமைச்சர் அவர்கள் எப்படியும் நல்லவனாக நடத்தலாம் என்று நினைத்தாலும், உங்களை சுற்றி இருப்பவர்கள் நடத்த விட மாட்டார்கள். கரூர் மீட்டிங்கில் உங்களுக்கு தெரியாது, அதற்காக சொல்கிறேன். கரூர் பொதுகூட்டத்தில் இங்கே இருக்கின்ற ஊழல் பெருச்சாளி செந்தில் பாலாஜியை கைது செய்யாமல் விடமாட்டோம் என்று சொன்னவர் தான், இப்போ அவரை தான் பக்கத்துல உட்கார வச்சிருக்காரு, இதெல்லாம் தெரிஞ்சிகோங்க, இதெல்லாம் சாதரணமான விஷயம்.
தேர்தல் நேரத்தில் வெளியே வரும். மோடிஜி அவர்கள் எப்போதுமே கட்சியை வளர்க்க வேண்டும், பெருசாக்க வேண்டும், அப்படி நினைப்பதை விட இந்தியா சிறந்த நாடக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனிதர். ஓட்டுக்காக கட்சி நடத்துபவர் அல்ல, நாட்டுக்காக கட்சி நடத்துபவர் தான் மோடிஜி அவர்கள். இதை மனதில் வைத்து என்னை போன்றவர்கள் எல்லாம் வந்ததுக்கு காரணம் இது தான். நாங்களெல்லாம் இதுவரை திராவிடத்தில் இருந்து தேசியத்திற்கு வந்ததற்கு காரணமே இதுதான் என தெரிவித்தார்.