தனது நடத்தையை தவறாக பேசிய மாமியாரை மருமகள் கொலை செய்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீபக்-நிகிதா தம்பதியினர். இத்தம்பதியினருடன் தீபக்கின் பெற்றோரும் வசித்து வந்தனர். ஆனால் நிகிதாவிற்கும் தீபக்கின் தாயான ரேகாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பாதிக்கப்பட்ட தீபக்கின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வர தீபக் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் மாமியார் மருமகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது 4 மாதம் கர்ப்பமாக இருந்த நிகிதாவை மாமியார் ரேகா தனது கணவர் தான் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா என்றும் மாமனாருடன் நிகிதா தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும் கூறினார். இதனால் மாமியார் மருமகள் இடையே சண்டை ஏற்பட்டு நிகிதா ரேகாவை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி விட்டார். அதன்பிறகு சுருண்டு விழுந்த மாமியார் மீது தீ வைத்து எரித்தார்.
இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீபக்கிற்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வீட்டிற்கு வந்த தீபக் தாய் ரத்த வெள்ளத்தில் எறிந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து நிகிதாவை சென்று பார்த்தார். அவர் தான் கொலை செய்யவில்லை எனக் கூறினார். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் நிகிதாவை கைது செய்தனர்.