இயக்குனர் நெல்சன், தோனி, தளபதி விஜய் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நேற்று வைரலானது. இதை கண்ட விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். வயிறு எரிகிறது. டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியசுக்கு சென்றுவிட்டது. சரி… அந்த புகைப்படத்தை அனுப்புங்கள். நான் தல தளபதியுடன் இருப்பதுபோன்று போட்டோஷாப் செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகில் உள்ள செட்டில் கிரிக்கெட் வீரர் தோனியின் விளம்பர படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. அப்போது தல தோனி விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இருவரும் உரையாடிய போது எடுத்த புகைப்படங்கள் நேற்று முதல் மிகவும் வைரலாகி வருகிறது.