Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி…. பரிசோதனை முடிவில் “ஷாக்”கான தாய்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி தனது தாயிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு தனது மகளிடம் விசாரித்த தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார்.

அப்போது ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியில் வசிக்கும் சித்தராஜ்(28) என்பவர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் சித்தராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |