Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றின் பெருமை…தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை…!!

வயிற்று பகுதியை பற்றி  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: 

நமது உடலுறுப்புகள் செவ்வனே செயல்பட ஆதாரமாயுள்ள உயிரணுக்கள் தோன்றி உடலைக் காத்து வளர்ப்பதற்கென தேர்ந்த இடம் வயிறு. இங்கே பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என கூறியதிலிருந்து வயிற்றின் பெருமை தெரிகிறது.

அந்த பத்து என்று சொல்லப்படுவது மானம், கல்வி, வன்மை, அறிவு,தானம், முயற்சி, காமம், குலம், தாவாண்மை, தேன்கசி போன்றவை. இதனையே வள்ளலார் அவர்களும்

உடம்பு வருவகை அறியீர் உயிர்வகை அறியீர்

உடல் பருக்க உண்டு நிதம் உறங்குவதற்கே அறிவீர்

என்று வகைகளை சுட்டிக்காட்டுகிறார். இது தவிர 2050ம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரும், “அருந்தியது அற்றது போற்றி உணின்” என்று எடுத்துரைத்துள்ளார்.

வயிறானது “ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாது பல நாட்கள் உணவை சேமித்து வைத்துக் கொள் என்றாலும் கேட்காது” என்று நாலடியார் நவிழ்கின்றது.

வாயில் சிலருக்கு அடிக்கடி வரும். நாக்கும் வெடித்து பிளவு காணப்பட்டால் அவர்களுக்கு அஜீரணம் மற்றும் வயிற்றில் புண் உள்ளது உள்ளதாகும்.

Categories

Tech |