Categories
உலக செய்திகள்

வயிற்றில் குழந்தையுடன் கர்ப்பிணி…! கொடூரத்தை செய்த மனித மிருகங்கள்… அதிரவைத்த சம்பவம் …!!

அமெரிக்காவில் மர்ம கும்பல் தாக்குதல் கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண் உள்பட ஆறு பேரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி போலீசின் பார்வைக்கு தென்பட்டார். அவரைக் கண்ட போலீசார் விசாரித்தபோது உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உள்பட அனைவரும் ஒரு வீட்டில் சடளமாக இருப்பதை கண்டறிந்தனர்.

ஆனால் தாக்குதல் மேற்கொண்ட கும்பலை குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை தெரியவில்லை. இந்த கோர சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் மீதும் குண்டு பாய்ந்து இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |