ரஷ்யாவில் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து நாலு அடி நீளம் கொண்ட பாம்பை வெளியே எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான தகெஸ்தானில் லெவாஷி என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் இரவு நேரம் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளி பகுதியில் உறங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் காலையில் கண் விழித்து பார்த்த போது தனது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போன்று உணர்ந்துள்ளார். அதுமட்டுமன்றி குமட்டல் உணர்வு இருந்துள்ளது. அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் என் வயிற்றுக்குள் பூச்சி போன்ற ஏதோ உயிரினம் புகுந்து இருப்பதாக கூறியுள்ளனர்.
அதனை அடுத்து பெண் டாக்டர் ஒருவர் எண்டோஸ்கோபி என்ற கருவியை அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் வாய் வழியாக செலுத்தி வயிற்றுக்குள் இருக்கும் உயிரினத்தை வெளியில் இழுக்க முயற்சி செய்தார். எண்டோஸ்கோபி கருவியுடன் நீளமாக ஒரு உயிரினம் வந்ததை பிடித்து இழுத்த மருத்துவர், முதலில் அது என்ன உயிரினம் என்பதை சரியாக கவனிக்கவில்லை. அதன் பின்னர் அந்த உயிரினத்தை முழுவதுமாக வெளியே எடுத்தபோது, அது நாலு அடி நீளம் கொண்ட பாம்பு என்பதை கண்டு அந்த மருத்துவர் அச்சத்தில் ஆழ்ந்து போனார்.
அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து வாய்வழியாக பாம்பை வெளியே எடுக்க கூடிய காட்சியை அங்கிருந்த மருத்துவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து வெளியே எடுத்த பாம்பு இன்னும் உயிருடன் இருக்கிறதா? அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் பாம்பு எவ்வளவு நேரம் இருந்தது? போன்ற தகவல்கள் எதுவும் தற்போது வரை தெரியவில்லை. அதே சமயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அந்த கிராமத்தில் வழக்கமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் திறந்தவெளியில் மக்கள் உறங்குவதை தவிர்க்குமாறு பல்வேறு முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.