Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்று வலிக்கு இப்படியா பண்ணுறது…. வாலிபர் பரிதாபமாக பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் வாழ்வில் விரக்தியடைந்து விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வருசநாட்டை அடுத்துள்ள கீழபூசனூத்து கிராமத்தில் நாகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நாகராஜ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் நாகராஜ் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த நாகராஜ் வாழ்வில் விரக்தியடைந்து திடீரென விஷம் குடித்துள்ளார்.

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வாலிபரை மீட்டு வருசநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகராஜை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் நாகராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வருசநாடு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |