10- ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த வரம் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் தனது மகளிடம் விசாரித்தார்.
அப்போது பண்டாரசெட்டிபட்டி பகுதியில் வசிக்கும் ஓட்டுநரான லெனின் ஆபிரகாம் என்பவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் லெனினை தீவிரமாக தேடி வருகின்றனர்.