Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தேத்தாகுடி தெற்கு வடக்குவெளி பகுதியில் சம்பந்தமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பந்தமூர்த்திக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வயிற்று வலி தீரவில்லை. இதனால் மிகுந்த வேதனையிலிருந்த சம்பந்தமூர்த்தி விஷத்தை அருந்திவிட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பந்தமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சம்பந்தமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |