தொட்டியம் அருகே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டியம் அருகே இருக்கின்ற சித்தூர் என்ற கிராமத்தில் பொய்யாமொழி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு 18 வயது உடைய தனலட்சுமி என்ற மகள் இருக்கிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. நேற்று கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.அதில் உடல் கருகி இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று தனலஷ்மி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் பற்றி தொட்டியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.