அடிக்கடி வயிற்று வலி என்று கூறிய இளைஞருக்கு ஸ்கேன் செய்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பத்வா கிராமத்தை சேர்ந்தவர் கரன். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் இளைஞருக்கு ஸ்கேன் எடுத்தனர். ரிப்போர்ட்டை பார்த்து மருத்துவர்கள் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவரது வயிற்றில் இரும்பு உட்பட பல பொருட்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் இளைஞரின் வயிற்றிலிருந்து கூர்மையான ஸ்க்ரூட்ரைவர்கள், ஆணிகள், தையல் ஊசிகள் போன்றவற்றை மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர்.
இது குறித்து கரனின் தந்தை கூறுகையில், “எனது மகன் மனநிலை பாதிக்கப்பட்டவன். ஆனால் எப்படி இத்தனை பொருட்களை அவன் விழுங்கினான் என்பது எங்களுக்கு தெரியாது” என தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கூறுகையில், கரண் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான். அவரிடம் எப்படி இத்தனை பொருட்கள் வயிற்றின் உள்ளே போனது என்று கேட்டபோது அவர் பதிலளிக்கவில்லை. ஏழு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருக்க வேண்டும். தொடர்ந்து அவரது உடல் நிலையை கவனித்து வருகின்றோம்” எனக் கூறினார்.