9ஆம் வகுப்பு படிக்கும் மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கற்பமாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தந்தையை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதால் ஆசிரியர்கள் அந்த மாணவியை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதில் அந்த மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் இது தொடர்பாக மாவட்ட சமூகநல துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து அவர்கள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது. அதில் சிறுமியின் தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அனைவருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.