Categories
லைப் ஸ்டைல்

வயிற்றை சுத்தப்படுத்த அருமருந்து…. இது ஒன்று இருந்தாலே போதும்…!!!

உங்கள் வயிற்றை சுத்தப்படுத்த அருமருந்தாக அமையும் ஆமணக்கு எண்ணெயில் சிறப்பு மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உறவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சில அளவு கடந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக வயிற்றில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன்படி வயிற்றில் உள்ள கோளாறுகளை சரிசெய்து வயிற்றை சுத்தமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

காய்ச்சிய ஆமணக்கு எண்ணெய்யில் 3 முதல் 5 துளிகள் வரை இரவு படுக்கப்போகும் முன் குடித்து வர, மலச்சிக்கல் நீங்கும். சிறு குழந்தைகளுக்கு 2 துளிகள் போதுமானது.
இது பக்கவிளைவற்ற பாதுகாப்பான மலமிளக்கி. காய்ச்சிய எண்ணெய்யுடன் கால் பங்கு எடையில் கடுக்காய்பிஞ்சுப் பொடியைச் சேர்த்து நன்கு அரைத்து வாய்வு, மூலக்கடுப்பு, ரத்தமூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கப்போகும் முன் 5 மில்லி வரை குடித்து வர, அனைத்து மூலப்பிரச்சினைகளும் தீரும்.

பெண்களின் சுகப்பிரசவத்திற்கு இந்த எண்ணெய் பெரிதும் பயன்பாடுடையது. மேலும் சுத்தமான மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய், நம் வயிற்றை அதிக அளவுக்கு சுத்தம் செய்யும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வயிற்றை சுத்தப்படுத்த இந்த ஆமணக்கு எண்ணெயைத் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இது உடனடியாக மலச்சிக்கலைத் தீர்த்து நம் வயிற்றில் இருக்கும் கிருமிகளை வெளித்தள்ளி விடும். மேலும் இந்த கிருமிகளை வராமலும் தடுக்கும். இந்த கலவையோடு அரை ஸ்பூனுக்கு உப்பும் சேர்த்துக்கலாம். பாதி எழுமிச்சையையும் இதனோடு சேர்க்க வேண்டும். இதனால் சளித்தொல்லையும் வராது. இதை வாரம் ஒருமுறை எடுத்துக்கலாம். இதை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதற்கு முன்பு சாதாரண பச்சைத்தண்ணீர் அரை கிளாஸ் குடித்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் இதைக் குடிக்க வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை குடித்தாலே நம் வயிறு சுத்தம் ஆக ஆரம்பிக்கும். இந்த தண்ணீரைக் குடித்த 15 நிமிடத்திலேயே நம் வயிறு சுத்தமாகிடும். இதை 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கால் கிளாஸ் அளவுக்கு கொடுக்கலாம். உடலில் ஏற்படும் காயங்களை, புண்களை குணப்படுத்தும் பண்புகள் ஆமணக்கு எண்ணெயில் நிறைந்துள்ளன. இந்த எண்ணெயை காயங்கள் உள்ள இடத்தில் தடவுவதன் மூலம், காயங்களை விரைவில் குணப்படுத்த இயலும். மேலும் காயங்கள் காய்ந்து போய், புண்கள் தீவிர நிலையை அடைவதை தடுக்க முடியும். காயங்களால் சருமத்தில் நாள்பட்ட அழுத்தம் அல்லது வடுக்கள் உண்டாகாமல் காக்கவும் இந்த விளக்கெண்ணெய் உதவும்.

Categories

Tech |