Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு அடித்து உதைத்த கணவர்… நிறைமாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பம்…!!!

கடலூர் மாவட்டத்தில் வரதட்சனை கேட்டு கணவர் துன்புறுத்தியதால் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடி அருகே எடையூர் அண்ணா நகர் என்ற பகுதியில் பழனி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 26 வயதில் சுலோசனா என்ற மகள் இருக்கிறார். அவர் கோவில் ஊரை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது சுலோச்சனா வரதட்சனை பரிசாக, 3 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை அவரின் பெற்றோர்கள் வழங்கியுள்ளனர்.

அப்போது சுலோச்சனா கணவர் மணிகண்டன் வரதட்சணையாக தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு பெண்ணின் பெற்றோர் பிறகு தருவதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்களால் வாங்கித் தர முடியவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மோட்டார் சைக்கிள் மற்றும் நகை வேண்டும் என்று சுலோச்சனாவை அடிக்கடி கொடுமை செய்து வந்துள்ளார். இதனையடுத்து சுலோச்சனா கர்ப்பமானார். அதன்பிறகும் வரதட்சனை வேண்டும் என்று மணிகண்டன் அவரை கொடுமை செய்துள்ளார்.

அதனால் மனமுடைந்த சுலோச்சனா கடந்த 2016 ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கு கடலூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக நீதிபதிகள் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |